2025 மே 14, புதன்கிழமை

கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 15.08.2015 அன்று கொலை செய்யப்பட்ட ஜமால்தீன் அமீன் என்பவரை கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கைத்துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டமுனயின் வழிகாட்டலில் செயற்பட்ட உப-பொலிஸ் பரிசோதகர் பி.ஏ.அர்ஜூன ரத்னாயக்க தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹா ஆகியோருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஓட்டமாவடி எஸ்.எம்.ரீ.ஹாஜீயார் வீதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

அவர் வழங்கிய தகவலின் படி ஜேர்மனில் தயாரிக்கப்பட்ட இலக்கம் 38 வகை கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் ஐந்தினையும் கைது செய்துள்ளதுடன் அவருடன் தொடர்புடையவர் மற்றுமொருவர் இருப்பதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .