Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
16 வயதுடைய எனது மகன் நகுலேஸ்வரன், பாடசாலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை விடுதலைப் புலிகள் கடத்திக்கொண்டு சென்றுள்ளார்கள் என்று மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு எனும் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளார்.
அங்கு மேலும் சாட்சியம் அளித்த அவர், 'கடந்த 2006.06.12 அன்று எனது வீட்டிலிருந்து மகன் பாடசாலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரித்து தேடி ஓடினோம். தமிழீழ விடுதலைப் புலிகள் கடத்திச் சென்றதாக அறிந்தோம்.
பின்னர் யுனிசெவ், சர்வதேச செஞ்சிலுவைக்குழு. போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு போன்றவற்றிடம் முறையிட்டோம்.
எனது மகன்; தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளிநொச்சி அறிவியல் முகாமில் இருப்பாக தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்தோம். அப்போது எனது மகன் என்னிடம் கூறினார். அப்பா என்னை விடமாட்டார்கள் எனக்கு 18 வயது முடிந்ததும், யுத்தம் செய்ய அனுப்பிவிடுவினம் எனக் கூறினார். அதன் பின்னர் எனது மகனின் தொடர்பு கிடையாது. பின்னர் எனது மகன் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்தது' என அவர் சாட்சியம் அளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
32 minute ago
43 minute ago
49 minute ago