2025 மே 14, புதன்கிழமை

எனது கணவரை மீட்டுத் தாருங்கள் ஆணைக் குழுவின் முன் மனைவி சாட்சி

Administrator   / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

காணாமல் போன எனது கணவரை மீட்டுத்தர சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு,போரதிவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மண்டூர் கணேசபுரம் கிராமத்தை சேர்ந்த லெட்சுமி  சாட்சியமளித்தார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஆணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 2009.03.20 அன்று எமது வீட்டிலிருந்து புறப்பட்டு மாமியின் வீட்டுக்குச் சென்று திரும்பும் வழியில்  எனது கணவர் காணாமல் போயுள்ளார். அன்றய தினம் எமது கிராமத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் சுற்றி வளைத்திருந்தனர். எனது கணவரை இராணுவத்தினர்தான் பிடித்துள்ளார்கள். இராணுவ முகாமும் பொலிஸ் நிலையமும் அமைந்திருந்தது.

அவர்களிடம் நான் சென்று விசாரித்தபோது எனது கணவரை அவர்கள் பிடிக்கவில்லை என தெரிவித்தனர்.

காணாமல் போகும்போது எனது கணவருக்கு 27 வயதாகும்.எமக்கு தற்போது 9 வயதுடைய பிள்ளை ஒன்று உள்ளது என்றார்.

மேலும்,எனது கணவர் காணாமல் போன நாள் முதல் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியோரிடம் முறையிட்டேன்.

ஆனால்,இன்று வரை எனது கணவர் வீடு வந்து சேரவில்லை.

தற்போது நான் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன், சமூர்த்தியினால் மாதாந்தம்  1500 ரூபாய்

மாத்திரம் கிடைக்கின்றது.எனது பிள்ளையும் படிப்பிக்க வேண்டும்.  எனக்கு எனது கணவர் இறந்து விட்டார் என்ற மரண சான்றிதழோ, நிவாரணங்களோ, தேவையில்லை.

எனது கணவரை கண்டுப்பிடித்து தர சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .