Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
வழமை போன்று பாடசாலைக்குச் சென்ற 15 வயது மகன், கடந்த 2006.09.02ஆம் திகதி முதல் காணாமல் போனான். இதுவரையில் மகன் வீடு திரும்பவில்லை என்று பழுகாமத்தைச் சேர்ந்த காணாமல்போன கபிலனின் தாய் யோகராணி, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வின் போதே மேற்படி தாய், தனது மகன் தொடர்பில் கண்ணீர் மழ்க முறைப்பாடு செய்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
எமது சொந்த கிராமமான பழுகாமத்தில் அமைந்துள்ள கண்டுமணி மகா வித்தியாலயத்துக்குச் சென்ற எனது 15 வயதுடைய மகன் பாடசாலை முடிந்ததும் மீண்டும் வீடு வந்து சேரவில்லை.
வழக்கமாக பாடசாலைக்கு எனது மகன் எமது வீட்டிலிருந்து கால் நடையாகத்தான் செல்வார். அன்றைய தினமும் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனது மகனை பாடசாலைக்குச் செல்லும் முன்னரே இடைமறித்து பிடித்துச் சென்றார்கள் என்று கேள்வியுற்றேன்.
கொக்கட்டிச்சோலையில் அமைந்திருந்த புலிகளின் தலைமைச் செயலகத்திலும் இலுப்படிச்சேனை மற்றும் வவுனியா வரையிலும் சென்று விசாரித்தோம். நாங்கள் உங்களது மகனை பிடிக்கவில்லை என அவ்வியக்கத்தினர் எம்மிடம் தெரிவித்தனர்.
எனது மகனுக்கு என்ன நடந்தது எனத் தெரியாது. தற்போது எனது மகன் பற்றிய தகவல்களை அறியவதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடி நிற்கின்றோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
34 minute ago
45 minute ago
51 minute ago