Administrator / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
எமது வீட்டு வளவை பார்த்துவிட்டு வருவதற்காக 1992.04.05ஆம் திகதி சென்ற எனது மகனான சீனித்தம்பி மன்மதராசா (வயது 25), இதுவரை வீடு திரும்பவில்லை என்று மட்டக்களப்பு, போரதீவுப்பற்று, சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த தங்கராணி என்ற தாய் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர் கூறியதாவது,
1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது பிரதேசத்தில் கடும் யுத்த சூழல் காணப்பட்டது. இதனால், நாங்கள் எமது சொந்த இடமான சின்னவத்தையிலிருந்து இடம்பெயர்ந்து ஆனையட்டியவெளி எனும் இடத்தில் குடியமர்ந்திருந்தோம்.
இந்நிலையில், 1992.04.05ஆம் எனது மகன் எமது சொந்த வீட்டு வளவை பார்துவிட்டு வருவதற்காகச் சென்றவர் மீண்டும் எம்மிடம் திரும்பவில்லை.
பின்னர் சின்னவத்தைக்குச் சென்ற எனது மகனை காணவில்லை என தேடினோம். அப்போது அப்பிரதேசத்தில் இராணுவத்தினர் தான் படையாகச் சூழ்ந்திருந்தர்கள்.
அவர்களிடமும் எனது மகனைப் பற்றி விசாரித்தேன். நாங்கள் பிடிக்கவில்லை என தெரிவித்தார்கள்.
சின்னவத்தையிலிருந்த எமது சொந்த வீடும் அன்றையதினம் இராணுவத்தினரால் எரியூட்டப்பட்டது. என்னுடைய மகனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இன்றுவரை எனது மகனை பற்றி எதுவித தகவலும் கிடைக்கவில்லை. தயவு செய்து எனது மகனைப் பற்றிய விடயங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள்' எனவும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago