2025 மே 14, புதன்கிழமை

கோயிலுக்குச் சென்ற 5 பிள்ளைகளில் நால்வரே வீடு திரும்பினர்

Administrator   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்
கடந்த 1990.10.21ஆம் திகதி இரவு கோவில் போரதீவு தெற்கிலுள்ள எமது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பெரியபோரதீவு காளி கோயிலுக்குச் சென்ற எனது மகன் திவாகரன் (வயது 15) வீடு திரும்பவில்லை என திவாகரனின் தாய் வெள்ளையம்மா தெரிவித்தார்.

காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (23), களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நடத்திய விசாரணையின்போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

சம்பவ தினம் இரவு கோவிலுகுச் சென்ற எனது 5 பிள்ளைகளில் 4 பெண் பிள்ளைகள் மாத்திரமே வீடு திரும்பி வந்தனர். ஆனால், எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் எனது மகனைக் கடத்திச் சென்றுள்ளதாக அறிந்தோம். அப்போது கருணா அம்மானின் தலைமையிலான தமிமீழ விடுதலைப் புலிகள்தான் அந்தப் பகுதியில் முகாமிட்டிருந்தார்கள்.

அவர்கள்தான் எனது மகனைக் கடத்திச் சென்றுள்ளார்கள். தற்போது 4 பெண் பிள்ளைகளோடு முறையான வீட்டு வசதிகளுமற்ற நிலையில் சிறியதொரு கொட்டகையில் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து வருகின்றோம்.  

எனது கணவருக்கும் வயதாகிவிட்டது. அந்த நிலையிலும் கூட அவர் கூலி வேலை செய்து என்னையும் 4 பெண் பிள்ளைகளையும் கவனித்து வருகின்றார். 

எமக்கு அரசாங்கத்தினால் வீடும் கட்டித்தரவில்லை. எந்தவித உதவியும் வழங்கவில்லை.

ஏன் என கிராம சேவை வினவினோம் அதற்கு எமக்கு சிறியதொரு கொட்டகைதான் கிடைத்துள்ளது. எமக்கு அரசாங்கம் உதவ வேண்டும்.

எனது மகன் பற்றிய விடயங்களையும் தெரிவிக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X