2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘20ஆவது திருத்தம் குறித்து இன்றுதான் தீர்மானிப்போம்’

பைஷல் இஸ்மாயில்   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, கிழக்கு மாகாண சபையில், இன்று (07) இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ​தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில், அவர் கருத்து தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண சபையின் முடிவை, சகல மாகாணங்களும் எதிர்பார்த்துள்ளன. அதேபோல, எமது மாகாண மக்களும் எதிர்பார்த்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.  அரசமைப்பின் விவகாரம் தொடர்பில், கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது, ஏற்பட்ட அமளியால், சபையின் நடவடிக்கைகளை தவிசாளர் சந்திரதாச கலப்பதி, செப்டெம்பர் 7ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X