2025 மே 01, வியாழக்கிழமை

22 ஆசிரிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜனவரி 29 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பிலுள்ள அரசினர் ஆசிரியர் கலாசாலையில் 2014,2015 ஆகிய கல்வியாண்டுகளுக்கு புதிதாக தெரிவான ஆசிரிய மாணவர்கள் 22 பேரையும் வரவேற்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (28)  கலாசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இவர்களில் ஆங்கில பாடத்துக்கு 14 பேரும் விஞ்ஞான பாடத்துக்கு 4 பேரும் கணித பாடத்திற்கு 3 பேரும் சமூக கல்விக்கு ஒருவருமாக 22 புதிய ஆசிரிய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ஏ.எஸ்.யோகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இதில் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.இராஜேந்திரன் உட்பட பிரதி அதிபர், விரிவுரையாளர்கள் சிரேஷ்ட ஆசிரிய மாணவர்கள் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .