2025 மே 03, சனிக்கிழமை

22 வயதுடைய கஞ்சா வியாபாரி கைது

Freelancer   / 2023 மார்ச் 09 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - கருவப்பங்கேணி பிரதேசத்தில்  புதூரைச் சேர்ந்த 22 வயதுடைய கஞ்சா வியாபாரி ஒருவரை 172 கிராம் கேரள  கஞ்சாவுடன் நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சுற்றுச் கூழல் பாதுகப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சந்திமால் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சும்பவதினமான நேற்று கருவப்பங்கேணி பிரதேசத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வியாபாரத்துக்காக கஞ்சாவை எடுத்துச் சென்ற 22 வயது இளைஞனை மடக்கிப்பிடித்ததுடன் 172 கிராம் கேரள கஞ்சாவை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X