2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

24 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 18 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களின் ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மஹிந்த சிந்தனையின் கீழ் மோட்டார் சைக்கிள்கள்  நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை  (16) கொழும்பில் வழங்கப்பட்டதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகரசபைகள், ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சிமன்றங்களின் ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கே இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினர் அடங்கலாக 07 உறுப்பினர்களுக்கும் ஏறாவூர் நகரசபை தலைவர் உட்பட 06 ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் 02 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஒரு சுயேட்சைக்குழு உறுப்பினர் அடங்கலாக 09 உறுப்பினர்களுக்கும் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் உட்பட 07 ஆளும் கட்சி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் அடங்கலாக 08 உறுப்பினர்களுக்குமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X