Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
கனகராசா சரவணன் / 2020 மார்ச் 11 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர், சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிக் கொண்டு தப்பியோடியச் சம்பவம், மட்டக்களப்பு சிறைச் சாலையில், திங்கட்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளதாக, மட்டுத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். குறித்த நபர், கம்பளைப் பிரதேசத்தில் கொள்ளையொன்றில் ஈடுபட்ட நிலையில், கண்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன், அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியது.
இந்நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 4 மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவர், சிறைச்சாலைக்கு முன்னாலுள்ள அத்தியட்சகரின் காரியாலயத்தை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், திங்கட்கிழமை (09) இரவு, வழமைபோன்று காரியாலத்தைச் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், சிறைச்சாலை அத்தியட்சகரின் காரியாலயத்தில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிக் கொண்டு, தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
மேற்படிக் கைதியை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago