2025 மே 02, வெள்ளிக்கிழமை

250 மீற்றர் நீளமான கொங்கிரீட் பாதை அமைப்பு

Super User   / 2014 பெப்ரவரி 17 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிழக்கு மாகாண விவாசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜெய்க்கா திட்டத்தின் உதவியுடன் ஏறாவூர் மிச் நகரில் 250 மீற்றர் நீளமான கொங்கிரீட் பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பொதுநல ஸ்தாபனங்கள் பாடசாலைகள் பள்ளிவாயல்களின் முக்கியஸ்தர்கள் அப்பிரதேச பொதுநல அமைப்புக்கள் மாகாண அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அமைச்சர் இந்த நிதி உதவியினை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த கொங்கிரீட் பாதை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஞாயிறு ஏறாவூர் மிச் நகரில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட்

"மக்களின் அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்தப்பேரழிவு, மற்றும் சுனாமி ஆகியவற்றில் துன்பங்களை சந்தித்த மக்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்க நான் இயன்ற வரை முயற்சி எடுப்பேன்.

எதிர்வரும் காலங்களில் இது போன்ற பல்வேறு வீதிகளை அபிவிருத்தி செய்து தருவதற்கான சகல முயற்சிகளையும் நான் எடுப்பேன்" என்றார். இந்த நிகழ்வில் ஏறாவூர் நகரசபை உறுப்பினர் எம் பெரோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X