2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

30 வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த வீதி பாவனைக்கு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி தமிழ் மக்களின் குடியிருப்புக்கும் முஸ்லிம்களின் ஏறாவூர் ஆற்றங்கரையோரப் பகுதிக்கும் இடையில் இருந்த அஹமட் பரீட் வீதியானது கடந்த 30 வருடங்களாக கிராமவாசி ஒருவரால் இரகசியமாக அடைத்துவைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,  உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த வீதி இன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து (09) மீண்டும் போக்குவரத்துக்கு விடப்பட்டுள்ளதாக ஏறாவூர் ஆறாம் குறிச்சி  கிராம அலுவலகர்  எம்.ஐ.கபீர் முஹம்மத் தெரிவித்தார்.

இந்த வீதி அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் போக்குவரத்துச் செய்வதில் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

வயல்வெளி மற்றும் பற்றையின் ஊடாக மக்கள் சென்றுவருவதை  தான் அவதானித்ததுடன்,  ஏற்கெனவே போக்குவரத்து வீதியாக  இருந்த இந்த வீதி இரகசியமாகத் தடைசெய்யப்பட்டு அடைக்கப்பட்டு கிடந்ததையும் தான் அறிந்ததாக கிராம அலுவலகர் கூறினார். 

இந்த நிலையில்,  இந்த வீதியை உடனடியாக  போக்குவரத்துக்கு விடுமாறு   குறித்த கிராமவாசிக்கு  கூறியததாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து  இன்றையதினம் (09) காலை ஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாக அதிகாரி ஜி.கிருபாகரன், கிராம அலுவலகர் எம்.ஐ.கபீர் முஹம்மத், ஏறாவூர் நகரசபை பிரதி நகரபிதா எம்.ஐ.எம்.தஸ்லிம் ஆகியோரால் இந்த வீதி திறந்துவிடப்பட்டது.

கிராம அலுவலரின் இந்தச் சேவையை பாராட்டிய ஏறாவூர் நகரசபையின் பிரதி நகரபிதா எம்.ஐ.எம்.தஸ்லிம், அடைத்துவைக்கப்பட்டிருந்த இந்த வீதியை கொங்கிறீட்  வீதியாக புனரமைப்பதுடன்,  மின்கம்பங்களை நட்டு மின்விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X