2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

312ஆம் நூற்றாண்டின் தொல் பொருட்களை பாதுகாக்கவும் : பிரசாந்தன்

Super User   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


 - வடிவேல் சக்திவேல்

சாதாரணமாகக் காணப்படும் புராதன பொருட்களை பாதுகாக்க விரையும்  தொல்பொருளியல்  திணைக்களம்  சிறப்பு மிக்க கி.மு 312ஆம் நூற்றாண்டளவில் மண்முனையை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த முதலாவது பெண் சிற்றரசி உலகநாச்சியின் கோட்டையும் அவரால் அமைக்கப்பட்ட காசி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இடிபாடுகளும் உள்ள ஆரையம்பதி சிகரம் பகுதியை பாதுகாக்க நழுவல் போக்கை கடைப்பிடிப்பது பொருத்தமற்றதொன்றாகும் என முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினரும் ஆற்றல் பேரவைத்தலைவருமான பூ.பிரசாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு இன்று வியாழக்கிழமை (04) எழுதியுள்ள நான்காவது ஞாபகமூட்டல் மடலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அம்மடலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கி.மு 312ஆம் நூற்றாண்டளவில் மண்முனையை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த முதலாவது பெண் சிற்றரசி உலகநாச்சியின் கோட்டையும் அவரால் அமைக்கப்பட்ட காசி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இடிபாடுகளும் எமது வரலாற்றைக் கூறும் ஆவணச் சின்னங்களாகும்.

ஆனால், இவை தற்போது கவனிப்பாரற்று காணப்படுவதுடன் தற்போது இவ் இடத்தை குப்பை கூளங்களாலும் ஊத்தை மணல்களாலும் நிரப்பி தடயங்களை சிதைத்து குடியிருப்பு காணிகளாக்க முயற்சிக்கின்றனர்.

1988-1989 காலப் பகுதியில் இவ் இடத்தில் புத்து மணல் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த போது படிகலிங்கம்,  காண்டா மணி , உள்ளிட்ட காசி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்குரிய விக்கிரகங்கள் மற்றும் உபகரணங்கள் தென்படவே  இவை தோண்டி எடுக்கப்பட்டு கோயில்குளத்தில் திருமதி.பொன்னமா  என்பவரது வீட்டில் வைத்து  வழிபட்டு வருவதுடன்  கோயில்குளம் ஆலய உற்சவத்தின்போது ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பூசையில் வைக்கப்படுவது இன்றும் வழக்கமாக உள்ளது.

அத்தோடு இங்கு அகழ்ந்து எடுக்கப்ட்ட 15 அடி அங்குலச் சதுரமும் 12 அடி உயரமும் கொண்ட சில கருங்கற் தூண்கள் இப்பொழுதும் ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் உள்ளது.

கி.பி 312ஆம் நூற்றாண்டு அளவிலேயே கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை கம்பு தடிகள் மூலம் குழைகளினால் பந்தலிட்டு பூசை செய்ததும். இவ் உலகநாச்சியே என வரலாறு கூறுகின்றது.

ஆகவே, வரலாற்று சிறப்பு மிக்க இவ் காசி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இடிபாடுகளையும் உலகநாச்சியின் கோட்டை எச்சங்களையும் ஆராய்ச்சிக்கு  உட்படுத்துவதோடு இப்பிரதேசத்தை புராதன இடமாக பேணி பாதுகாப்பதற்கு ஆவணை புரியுமாறு பல முறை தங்களுக்கும், தொல் பொருளியல் திணைக்களத்துக்கும் அறிவித்திருந்த போதும் இது வரையும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்பதை மன வேதனையுடன் அறியத்தருகின்றோம்.

அத்தோடு கடந்த சில நாட்களாக இப்பகுதியில் திட்டமிட்டு சிலர் சுற்று வேலியிட்டு கனரக பழுதூக்கி மற்றும் அகழ்வியந்திரங்களை கொண்டு நிலத்தை அகழ்வதுடன் சமப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 அரச காணியாகவும் வரலாற்று சிறப்பு மிக்க உலக நாச்சியின் அரண்மனையாகவும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றான காசி லிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமாகவும் புதைபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இச் சிறப்பு மிக்க இடத்தை பேணிப்பாதுகாக்காது வேடிக்கை பார்க்கும் நிலை மிக மிக வேதனைக்கும், வெட்கப்படுவதற்கும் உரியதாகும்.

சம்பந்தப்பட்ட தொல்பொருளியல்  திணைக்களத்தினால் மட்டு., அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளரிடம் பல தடவைகள் கூறியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதுவும் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்கடித்தின் பிரதி தொல்பொருளியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துக்கும் அனுப்பி வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X