2026 மே 14, வியாழக்கிழமை

38ஆம் கொலனி புதுமுன்மாரிச்சோலை கிராமத்திற்கு மின்சாரம்

A.P.Mathan   / 2013 ஜூலை 04 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்,வடிவேல் சக்திவேல்
 
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் 38ஆம் கொலனி புதுமுன்மாரிச்சோலை கிராமத்திற்கு உத்தியோகபூர்வமாக மின்சாரம் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
 
மீள்குடியேற்ற பிரதிஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச மின் அத்தியட்சகர் அனுசாந்தன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரட்ணம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 
38ஆம் கொலனி, புதுமுன்மாரிச்சோலை கிராமம் மீள்குடியேற்ற கிராமம் என்பதுடன் அடிக்கடி யானைகளின் தாக்கத்திற்கு உள்ளாகும் கிராமமாகும். பல தசாப்தமாக மின்சாரம் இன்றி இருந்த 38ஆம் கொலனி புதுமுன்மாரிச்சோலை கிராமத்திற்கு தற்போது மின்சாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கிராமத்திலுள்ள பொதுமக்களின் நலன் கருதி ஒரு கோடியே 44 இலட்சம் ரூபா செலவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் 126 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நன்மையடைவார்களெனவும் மின்சார சபையின்  களுவாஞ்சிக்குடி பிரதேச அத்தியட்சகர் கே.அனுசாந் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .