2026 மே 07, வியாழக்கிழமை

4 மாதங்களில் 350 கசிப்பு உற்பத்தியாளர்கள் கைது

Suganthini Ratnam   / 2013 மே 17 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியிலும்  கசிப்பு விற்பனையிலும் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 350 பேர் கடந்த 4 மாதங்களில் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகாரிகள் மேற்கொண்ட திடீர்ச் சோதனை நடவடிக்கைகளின்போதே இவர்களை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரனின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றக் கிராமங்களில் இத்திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .