2025 மே 12, திங்கட்கிழமை

40 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டம் 306 சி2 அரிமாக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை(20) மட்டக்களப்பு லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் லயன் ஜே.சுகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆளுனர் லயன் லசந்த பெரேராவால் சர்வதேச லயன்ஸ் கழக ஸ்தாபகர் மெல்வின் ஜோன்ஸ் பின்பற்றல் (எம்.ஜே.எப்) பட்டம் பெற வேண்டியவர்களுக்குரிய தகமைகள் பற்றி விளக்கமளித்தார்.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினூடாக 25 வருடங்கள் சிறப்பான சேவை செய்த லயன் ரி.அருணகிரிநாதன், லயன் ஜி.பாஸ்கரன், லயன் ஏ.எஸ்.ஆர்.தவராஜா, லயன் எந்திரி ரி.மகேந்திரராஜா மற்றும் லயன் கலாநிதி எம்.கனகரெட்னம் ஆகியோர் மாவட்ட ஆளுனரால் நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

முதலாவது பிரதி ஆளுனர் லயன் காரிஸ், மாவட்டச் செயலாளர் லயன் சந்தக, முன்னாள் மாவட்ட ஆளுனர் லயன் கே.டி.கே. விஜயநாயக்க, மாவட்ட பிரதிச் செயலாளர் லயன் எந்திரி என்.வி.ரஞ்சன், மாவட்ட பிரதிப் பொருளாளர் லயன் ஜி பாஸ்கரன் மற்றும் பிராந்திய தலைவர் லயன் எம்.மனோகரன், மட்டக்களப்பு லயன்ஸ் கழகச் செயலாளர் லயன் கணக்காளர் ஏ.ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X