2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

4000 ஏக்கரில் நிலக்கடலை செய்கை

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது உப உணவு பயிர்ச்செய்கையான நிலக்கடலை 4000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவித்தார்.

தற்போது நிலக்கடலை அறுவடை ஆரம்பித்துள்ளது. அறுவடை செய்யும் நிலக்கடலை மாவட்டத்தின் மக்கள் கூடும் இடங்களிலும் பொதுச்சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, கிரான், வவுணதீவு, வாகரை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகம் நிலக்கடலை செய்கை பண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது உப உணவு பயிர்ச்செய்கை சோளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .