Gavitha / 2014 டிசெம்பர் 23 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு செவ்வாய்க்கிழமை (23) முதல் மோசமாக காணப்படுவதாக, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் செவ்வாய்க்கிழமை (23) அறிவித்துள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 314 கிராம சேவையாளர் பிரிவுகளில், 117,762 குடும்பங்களைச் சேர்ந்த 421,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும் மாவட்டத்தில் 11,733 குடும்பங்களைச் சேர்ந்த 40,723 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள், மாவட்டத்தின் ஆங்காங்கே காணப்படுகின்ற பொதுக்கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் 105 நலம்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவற்றினை விட 33,191 குடும்பங்களைச் சேர்ந்த 118,936 நபர்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து அவர்களது நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
நலம்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் 52,755 குடும்பங்களைச் சேர்ந்த 113,849 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில், வாழ்வாதார ரீதியாகவும் பாத்திப்படைந்துள்ளதாக மேற்படி மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3093 வீடுகள் முழு அளவிலும் 6,316 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago