2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

437 ஆவது அறநெறி பாடசாலை ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 07 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேசத்திற்குட்பட்ட காயான்மடுவில் நேற்று 437 ஆவது அறநெறிப் பாடசாலையின் ஆரம்ப விழா இடம்பெற்றது.

ஏற்கனவே 436 இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் மட்டக்களப்பில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் நிலையில் இவ் அறநெறிப் பாடசாலை ஆரம்ப விழா காயான்மடு அ.த.க.பாடசாலையில் ஆரம்பமானது.

காயான்மடு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில்  கலைக்கவிஞர் கி.அருளம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  மண்முனை மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் கி.சுப்பிரமணியம், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.கணேஸ், எஸ்.முருகேசப்பிள்ளை, இந்து கலாசாரப் பேரவையின் மட்டக்களப்பு இணைப்பாளர் சிவசிறி எஸ்.ராமதாஸ் குருக்கள், அதிபர் தி.புலெந்திரகுமார், அதிபர் கே.உதயகுமார், இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் மா.சசிகுமார், உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X