2025 மே 22, வியாழக்கிழமை

5 வருடங்களின் பின்னர் பிறப்பு, இறப்பு பதிவாளர் நியமனம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணை கிராமத்துக்கு சுமார் 5 வருடங்களின் பின்னர் பிறப்பு, இறப்பு பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்கிராமத்துக்கான பிறப்பு, இறப்பு பதிவாளராகவும், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலகத்துக்கான விவாகப் பதிவாளராகவும் துறைநீலாவணையைச் சேர்ந்த தினகரப்பிள்ளை புகழேந்தி, நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நியமனம், கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால்  கடந்த 14ஆம் திகதி  வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பதிவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் நீல் த அல்விஸ் கலந்துகொண்டார்.

2012ஆம் ஆண்டு முதல் பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர் நியமிக்கப்பட்டவில்லை என்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட தினகரப்பிள்ளை புகழேந்தி,  துறைநீலாவணையில் பல சமூக நிறுவனங்களிலிலும், ஆலயங்களிலிலும் இருந்து காத்திரமான சமூகசேவை செய்தவராவார். இவர், அமரத்துவம் அடைந்தவர்களான கொத்தணி அதிபர் தினகரப்பிள்ளை மற்றும் சோதிமணி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வருமாவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .