2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

500 மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 20 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


தேசத்துக்கு நிழல் திட்டத்தின்; கீழ், இலங்கை வங்கியின் மட்டக்களப்பு மேற்தரக் கிளையால் 500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றது.

மேற்தரக்கிளையின் முகாமையாளர் எம்.ஐ.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாடிக்கையாளர்களுக்கு தென்னை, மா, தோடை, எலுமிச்சை மற்றும் சவுக்குமரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அத்தோடு, வீச்சுக்கலமுனை புனித அன்னம்மாள் வித்தியாலயம் மற்றும் புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயங்களில் மரங்கள் நடப்பட்டன.
குறித்த கிளையின் உதவி முகாமையாளர் கே.சாமித்தம்பி, மட்டக்களப்பு மாநகரசபையின் உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன், மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சசீந்திரசிவகுமார் மற்றும் பாசாலை அதிபர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X