2026 மே 07, வியாழக்கிழமை

60 இலட்சம் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 05 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, போதனா வைத்திசாலைக்கு ரி.டி.எச் நிறுவனம் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபரணங்களை கையளித்துள்ளது.

உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம் தலைமையில் இன்று புதன்கிழமை வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, மகப்பேற்று மற்றும் சிறுவர் விடுதிக்கான கட்டில்கள், கதிரைகள், பரிசோதனை கருவிகள் உட்பட பெருமளவிலான வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ரி.டி.எச்.நிறுவன பொறுப்பதிகாரி டாக்டர் கே.நச்சினாக்கினியர், மகப்பேற்று வைத்திய நிபுணர் எஸ்.சிறாஜ் உட்பட வைத்திய நிபுணர்கள் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .