2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

60 மாணவர்களுக்கு சோலார் மின்குமிழ்கள்

Freelancer   / 2023 ஜனவரி 17 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா
மட்டக்களப்பு ரோட்டரி கழகம் மட்டு.மேற்கு வலயத்தில் மிகவும் பின்தங்கிய, மின்சாரம் இல்லாத 60 மாணவர்களுக்கு சூரிய ஒளியில் இயங்கும் மின் குமிழ்களை வழங்கி வைத்தது.

மட்டக்களப்பு ரோட்டரிக் கழக தலைவர் றோட்டரியன் பி.ரமணதாச தலைமையில் இந்த நிகழ்வு சனிக்கிழமை (14) நடைபெற்றது.

குறிஞ்சாக்கேணி பாவற்கொடிச்சேனை உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே வழங்கி வைக்கப்பட்டன.

 நிகழ்வுகளில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு மின் குமிழ்களை வழங்கி வைத்தார்.

புதிதாக நியமனம் பெற்ற கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலாவுக்கு ரோட்டரி கழகத் தலைவர் ரமணன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .