2025 மே 01, வியாழக்கிழமை

600 குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர்

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கான்
 
இலங்கை ஹிறாபவுன்டேசன் நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 600 தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கு இலவச குடி நீரை பெற்றுக் கொள்வதற்கான நிதி உதவிகள் இன்று(31) சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
 
பொருளாதார அபிpவருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் சவூதி அரேபியாவிலுள்ள தனவந்தர் ஒருவரின் நிதியுதவியுடன் இந்த இலவச குடி நீரை பெற்றுக் கொள்வதற்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
 
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஹிறாபவுண்டேசன் நிறுவனத்தின் தலைவரும் பிரதியைமச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், சஊதி அரேபிய இமாம் அஸ்ஸெய்ஹ் ஸலாஹ் பின் ஸாலிஹ் பஊத் உதுமான் மற்றும் சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
இதன் போது காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி, தாழங்குடா, நாவற்குடா, பாலமுனை, பூநொச்சிமுனை, காங்கேயனோடை, புதிய காத்தான்குடி மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு இந்த இலவச குடி நீரை பெற்றுக் கொள்வதற்கான நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டன.
 
இதில் சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்களில் தலா ஒரு குடும்பத்திற்கு 5480 ரூபாவும், சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒரு குடும்பத்திற்கு 3240 ரூபாவும், வழங்கப்பட்டதுடன் 35 கடும்பங்களுக்கு இதில் முழுத் தொகையான 16580 ரூபாவும் வழங்கப்பட்டன.
 
அதே போன்று வறிய குடும்பங்களின் வாழ்வாதார தொழில் மேம்பாட்டிற்காக 20 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களும், இரண்டு குடும்பங்களுக்கு மா அரைக்கும் இயந்திரங்களும், வழங்கப்பட்டன.

இது வரை ஹிறாபவுண்டேசனினால் 3500 தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கு இலவச குடி நீரை பெற்றுக் கொள்வதற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஹிறாபவுண்டேசன் நிறுவனத்தின் இணைப்பாளர் எம்.குறைஸ் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .