2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

72 வருடங்களுக்குப் பின்னர் ஆசிரியர் கலாசாலைக்கு மூன்று மாடிக் கட்டடம்

Editorial   / 2018 மே 17 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன, ஒலுமுதீன் கியாஸ்

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய 3 மாடி நிர்வாகக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் நாட்டிவைக்கப்படவுள்ளது.

கல்லூரி அதிபர் வி.பரமேஸ்வரன் தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை(19) காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்கிறார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும், கௌரவ அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நல்லையாவின் பெரு முயற்சியால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலைக்கு, 72 வருடங்களுக்குப் பின்னர் புதிய மூன்று மாடிக் கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரன் ஏற்பாட்டில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .