2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

90 வளர்ப்பு நாய்களுக்கு விசர்நாய்க்கடி தடுப்பூசி ஏற்றம்

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பில் 90 வளர்ப்பு நாய்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (2) விசர் நாயக்கடி தடுப்பூசி ஏற்றப்பட்டதாக காத்தான்குடி கால்நடை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி சாலக சூரிய தெரிவித்தார்.

காத்தான்குடி எல்லையிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் 50 நாய்களுக்கும் அதேபோன்று ஆரையம்பதி பிரதேசத்தில் 30 நாய்களுக்குமே இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி கால்நடை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி சாலக சூரிய தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கோவேந்திரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.முபஸ்ஸிர் உட்பட அதன் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X