2025 மே 02, வெள்ளிக்கிழமை

98,000 ரூபாய் பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நுர்தீன்
, வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு, மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்னவத்தை மற்றும் மாவையன்கட்டு ஆகிய கிராமங்களிலுள்ள 8 மாணவர்களுக்கு 98,000 ரூபாய் பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் திங்கட்கிழமை (3) மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வைத்து வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது, 8 வண்டிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த துவிச்சக்கர வண்டிகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்திமுரளிதரன் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் துவிச்சக்கர வண்டிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைவாக இதுவரை 104 மாணவர்களுக்கு இவ்வாறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக  மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பு செயலாளர் பொன் ரவீந்திரன் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கே.ஜானக சுகதாச, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுதீன், பிரதியமைச்சரின் இணைப்பு செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .