2026 மே 06, புதன்கிழமை

"சிலை உடைத்தவர்கள் ஒரு வாரத்துக்குள் கைதாகவேண்டும்: இல்லையாயின் போராட்டம்"

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் சிலைகளை உடைத்து சேதப்படுத்திய சக்திகளை ஒரு வார காலத்திற்குள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாவிடின் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை, மட்டக்களப்பில் நடைபெற்ற சிலை உடைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற பொன் செல்வராசா இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'இந்த சிலையை உடைத்த சூத்திரதாரிகளை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. அவர்கள் அதை ஒருவாரத்திற்குள் செய்ய வேண்டும். இல்லாவிடில் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்த வேண்டுமென நான் இக்கூட்டத்தில் ஒரு பிரேரணையாக முன் வைக்கின்றேன்.

சுதந்திர விசாரணை ஒன்றை பொலிஸார் துரிதமாக நடத்த வேண்டும். இல்லையேல் நாங்கள் இந்த கவன ஈக்ப்பு போராட்டத்தை நடத்த வேண்டும். இலங்கையின் வெளிவிவகார அமைச்சு பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பாக கூறியுள்ளது.

விசாரணையை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இந்த சிலைகள் உடைப்புக்கும் திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்புக்கும் சம்பந்தம் இருப்பது போல் தெரிகின்றது.

அங்கு தந்தை செல்வாவின் சிலையை உடைத்தார்கள். மட்டக்களப்பில் நான்கு பேரின் சிலைகளை உடைத்துள்ளனர். இங்கு உடைக்கப்பட்ட சிலைகளில் மகாத்மா காந்தியின் சிலையை உடனடியாக  புனரமைப்பு செய்தமை குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறப்பதிகாரியிடம் வினவினேன்.

அதை பொலிஸாரே புனரமைத்ததாக அவர் என்னிடம் கூறினார். இந்த சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் பலரும் பலதையும் கூறுகின்றனர். அவற்றில் எந்த வித உண்மையுமில்லை. ஆனால் உரிய நபர்களை கைது செய்ய வேண்டிய பொறுப்பு பொலிஸாரிடம் உண்டு.

இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன்...

'உடைத்து சேதப்படத்தப்பட்ட சிலைகளை அவசர அவசரமாக புனரமைப்பதிலுள்ள மர்மம் என்ன என நான் கேட்கின்றேன். மட்டக்களப்பில் இந்த நான்கு சிலைகளையும் உடைத்தமைக்கெதிராக நாம் கண்டனத் தீர்மானமொன்றை இந்த கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். இந்த சிலை உடைப்பு இது முதற்தடவையல்ல. ஆரையம்பதியில் சுவாமி விவோகானந்தரின் சிலை உடைக்கப்பட்டது.

ஆரையம்பதியில் உடைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு அதே இடத்தில் அச்சிலை வைக்கப்பட்டு 48 மணித்தியாலயங்களுக்குள் இந்த சிலைகள் மட்டக்களப்பில் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன
இது மக்கள் மத்தியல் அதிர்ச்சியையும் பீதியையும் கவலையையும் எற்படுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறையினர்தான் இதற்கு பதில் கூறவேண்டும்.

இவ்வாறு நாங்களும் கூட்டத்தை கூடி கதைத்து விட்டுப்போவோம். ஆனால் நடப்பது ஒன்றுமில்லை. சிலைகள் உடைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. ஆரையம்பதியில் சிலை உடைத்தவர்களை இன்னும் பொலிசார் சட்டத்தின் முன் நிறுத்த வில்லை.

எனவே தான் பாதுகாப்புத் துறையினர் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதுடன் இவ்வாறான செயல்கள் நடைபெறாவண்ணம் பாதுகாக்க வேண்டும் மட்டக்களப்பில் உடைக்கப்பட்டுள்ள சிலைகளை அவ்வாறே வைத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய சிலைகளை அந்த இடத்திற்கு அருகாமையில் அமைப்பது நல்லது' என அவர் தெரிவித்தார்.

  Comments - 0

  • P.Sabeshan Wednesday, 11 April 2012 04:31 AM

    pothu makkal பிடித்து கொடுக்க வேண்டிய thevai ஏற்பட்டுள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .