2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அஞ்சல் அலுவலகத்தில் கொள்ளை

Niroshini   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கியெல்ல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (30) மாலை 3 பேர் கொண்ட கொள்ளை கோஷ்டியினர் உப அஞ்சல் அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 12 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 275 கிராம் தங்க நகைகளையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

உப அஞ்சல் அலுவலக அதிபர் தனது மகளை அலுவலகத்தில் நிறுத்திவைத்து விட்டு வெளியே சென்ற போதே இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றது.

இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் உப அஞ்சல் அலுவலக பாதுகாப்பு பெட்டி திறந்து இருந்ததாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X