2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பு

Gavitha   / 2015 நவம்பர் 08 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

16 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் சகலரையும் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா கேட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (08) ஏறாவூர் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளினூடாக அவர் பொதுமக்கு இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகப்பிரிவில், 16 வயதுக்கும் மேற்பட்ட சகலருக்கும் தேசிய அடையாள  அட்டைகளை  பெற்றுக்கொடுப்பதற்காக ஏறாவூர் நகர பிரதேச செயலக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிவித்தலின் போது அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் சகலரும் தத்தமது கிராம சேவகரினூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதனை துரிதமாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X