Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பழுலுல்லாஹ் பர்ஹான்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனே ரத்துச் செய் என்றும் அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம் என்றும் மேலும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய் எனக் கூறும் வகையில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் மட்டக்களப்பில் ஒட்டப்பட்டுள்ளன.
சம உரிமை இயக்கம் எனும் பெயரில் மட்டக்களப்பு நகர், மஞ்சந்தொடுவாய், ஊறணி, நாவற்குடா போன்ற இடங்களில் இவ்வாறான வசனங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் மதில் சுவர்களிலும், பொது இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73 ஆவது கூட்டம் நடைபெற்ற நிலையிலும், அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் வடக்கு, கிழக்கில் பல பகுதிகளிலும் தற்போது போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இவ்வாறான கருத்துகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
32 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
3 hours ago
3 hours ago