Editorial / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“அடுத்த 5 வருட நாடாளுமன்றக் காலத்துக்குள் மட்டக்களப்பில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்காக குறைந்தபட்சம் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செய்லூப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் வாவிக்கரையோர செய்னுலாப்தீன் ஓய்வுப் பூங்காவைப் புனரமைப்புச் செய்து, ஏறாவூர் நகர சபைக்குக் கையளிக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
ஏறாவூர் நகரசபைத் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் தலைமையில் நேற்று (16) மாலை இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நஸீர் அஹமட், “இந்த மாவட்டத்திலே காலாகாலமாக இருந்து வந்த சீர்கேடான இனவாத அரசியல் வழிமுறைகளை மாற்றி, ஆர்வமூட்டக் கூடியதான புதிய கனவான் அரசியல் கலாசாரம் ஒன்றை தமிழ், முஸ்லிம் எம்பிக்கள் இணைந்து உருவாக்க வேண்டும்.
“இந்த விடயத்தில், தமிழ் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இணைந்து புதிய போக்கிலே சிந்தித்தாலே ஒழிய சிறுபான்மை சமூகங்களுக்கு விமோசனம் இல்லாமல் போய் விடும்.
“இனவாதத்தைப் பேசிப் பேசி சமூகத்தை ஏமாற்றுகின்ற ஒரு வெற்று அரசியல் தலைமைத்துவமாக என்னால் இருக்க முடியாது.
“குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே ஓர் இலக்குடன் நாங்கள் பயணிக்க வேண்டும். குறைந்தபட்டசம் 40 ஆயிரம் தனியார்துறை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
“அதேநேரம், அரச துறைகளில் இருந்து வருகின்ற ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளிலே ஆகக் கூடியளவு வேலைவாய்ப்புகளை எவ்வாறு எங்களுடைய மட்டக்களப்பு மாவட்டத்துக்குக் கொண்டு வந்து, இங்குள்ள தமிழ், முஸ்லிம், இளைஞர், யுவதிகளுக்கு வழங்கலாம் என்பதில் கவனஞ் செலுத்த வேண்டும்” என்றார்.
18 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago