2025 மே 09, வெள்ளிக்கிழமை

அணைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீர்ப்பாசனக் குளங்கள், அணைகள் சார்ந்து ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புக்கள் குறித்த அணைப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயலமர்வு, திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால், இன்று (17) நடத்தப்பட்டது.

மழைக் காலங்களில் குளங்களை அண்டிய பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலைமையைத் தவிர்க்கும் வகையில், மக்களைத் தயார்படுத்தும் வகையில், இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவின் கள்ளிமேடு பிரதேசத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுச் செயலமர்வில், திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலராஜா, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கந்தளாய் பிரிவுக்குப் பொறுப்பான பொறியியலாளர் டப்ளியூ.ஜே.பிறியந்த ஆகியோர், வளவாளர்களாகக் கலந்துகொண்டு விளக்கங்களை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X