2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அதிகூடிய வருமானத்தை ஈட்டித் தரும் அழகுக்கலை

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 மார்ச் 08 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அதிகூடிய வருமானத்தை ஈட்டித் தரும் அழகுக்கலை  தொழிலை நேர்த்தியாகவும், சட்ட ரீதியாகவும் செயல்படுத்துவதற்கு கூட்டுறவு சங்கம் ஊடாக பதிவு செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில் அழகுக்கலை தொழிலை மேம்படுத்துவதற்கு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை  நிபுணர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி சிறிகாந்த் தலைமையில் மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (05) பகல் நடைபெற்றது.

அழகுக்கலை தொழிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேம்படுத்துவதற்கான செயற்பாட்டுக்கென மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அழகுக்கலை அமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்பித்து வைக்கப்பட்ட அழகுக்கலை அமைப்பின் இரண்டாவது கலந்துரையாடலாக இந்தக்கலந்துரையாடல்  மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது அமைப்பின் யாப்பு, அமைப்பின் சுலோகம் (லோகோ) அமைப்பின் எதிர்கால செயல்பாடுகள், தொழிலுக்கான வங்கி கடன் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் அரச வர்த்தக முதலீட்டு வங்கி முகாமையாளர் கே.கோகுலராமன், உதவி முகாமையாளர் எஸ். வேணுகாந்தன், மாவட்ட செயலக முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்களான எஸ்.வினோத், திருமதி கே. தாரணி, மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை அமைப்பின்  தலைவர் திருமதி. எஸ்.வனிதா, செயலாளர் செல்வி. கே.சுபாசினி, தேசிய கைத்தொழில் பயிலுனர் அதிகார சபையின் பரிசோதகர் என்.இராசமோகன் மற்றும் மாவட்ட  அழகுக்கலை அமைப்பின் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X