Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தின் விஞ்ஞான தொழில்நுட்பட ஆய்வு கூடக்கட்டடத்துக்கு இனந்தெரியாதோரால் இன்று வியாழக்கிழமை அதிகாலை கறுப்பு ஒயில் வீசப்பட்டு அக்கட்டடத்தின் நினைவுப்படிகம் உடைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட இப்பாடசாலையின் விஞ்ஞான தொழில்நுட்பட ஆய்வு கூடக் கட்டடம் நேற்று வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்படவிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் கறுத்த பொலித்தீன் கட்டப்பட்டிருந்ததுடன் பாடசாலையின் அதிபர் அறை மற்றும் பாடசாலையின் பிரதான நுழைவாயில் கதவின் பின் பகுதியில் போடப்பட்டிருந்த பூட்டுக்களுக்கு பசை பூசப்பட்டு திறக்கமுடியாதவாறு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பாடசாலையின் அதிபர் எம்.அல்லாபிச்சை காத்தான்குடி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற் கொண்டதுடன் அங்கு போடப்பட்டிருந்த பூட்டுக்களையும் உடைத்து கதவுகளை திறந்தனர்.
குறித்த பாடசாலையின் விஞ்ஞான தொழில்நுட்பட ஆய்வு கூடக்கட்டடம் தற்போதைய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவி வகித்த போது அவரின் சிபாரிசுக்கமைய ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டு கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தப் பின்னர் திறந்து வைக்கப்பட்டது.
எனினும், அது உத்தியோகபூர்வமாக திறக்கப்படவில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சரே இந்தக்கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பார் எனவும் முதலமைச்சரின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில்,இக்கட்டடம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago