2025 மே 07, புதன்கிழமை

அந் நாசர் வித்தியாலய ஆய்வுகூடம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று வியாழக்கிழமை திறந்துவைத்தார்.

இந்த ஆய்வுகூடத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆய்வுகூடக் கட்டடத்துக்கு இனந்தெரியாதோரினால் நேற்றையதினம் அதிகாலை கறுப்பு எண்ணெய்; ஊற்றப்பட்டு, அக்கட்டடத்தின் நினைவுப்படிகமும் உடைக்கப்பட்டது.

அத்துடன், இந்தப் பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கறுத்த பொலித்தீன் கட்டப்பட்டிருந்ததுடன், அதிபர் அறை மற்றும் பாடசாலையின் பிரதான நுழைவாயில் கதவின் பின்பகுதியில் போடப்பட்டிருந்த பூட்டுகளுக்கு பசை பூசப்பட்டு திறக்கமுடியாதவாறு செய்யப்பட்டிருந்தது.

சேதமாக்கப்பட்ட நினைவுப்படிகம் உள்ளிட்டவற்றை சரி செய்து பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆய்வுகூடம்  திறந்துவைக்கப்பட்டது.

இந்த ஆய்வுகூடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு பாடசாலை அதிபர் தெரியப்படுத்தினார். இதனை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அங்கு பசை பூசப்பட்டிருந்த பூட்டுகளையும் உடைத்து கதவுகளைத் திறந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X