Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
மின்சார வசதியின்றியுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இருள் அகன்று முழு நாடும் ஒளிமயம் தேசிய மின்வழங்கல் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மின்சார வசதியின்றியுள்ள சகல கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை எமது அமைச்சினூடாக இலங்கை மின்சாரசபை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மின்சாரம் இல்லாத சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும். அதற்காக கிராம மட்டங்களில் நாம் விண்ணப்படிவங்களை வழங்கவுள்ளோம். விண்ணப்பப்படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக மின் இணைப்பு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு, அந்த விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து கிராம அலுவலர்களிடம் கையளிக்க வேண்டும். அவ்விண்ணப்படிவங்களைப்; பெற்று பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதன் பின்னர் அந்த விண்ணப்பப்படிவங்களை பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து, பிரதேச மின் பொறியியலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்கள்;, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இணைந்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்போது, மின்சார சபையினால் வீடுகளுக்கு மின் இணைப்பு வேலை செய்து கொடுக்கப்படும். குடிசை வீடுகளாயினும் தற்காலிக வீடுகளாயினும் சரி அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வேலை செய்து கொடுக்கப்பட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
ஒரு வீட்டுக்கு இணைப்பை வழங்க 40,000 ரூபாய் செலவாகும். அந்தப் பணத்தை குறித்த வீட்டுக்காரர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் மின்பட்டியலுடன் சேர்த்து 680 ரூபாய் அறிவிடப்படும். 72 மாதங்களுக்கு இந்த தொகையை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது இலகுவான தவணை அடிப்படையிலேயே அறிவிடப்படும். ஒரு வீட்டுக்கு மின்சாரம் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் செலவாகும்.
எதிர்வரும் தமிழ் சிங்கள, புதுவருட புத்தாண்டு தினத்திற்கு முதல் தினத்துடன் இந்த திட்டம் நிறைவு செய்யப்படும். அதன் பின்னர் எந்த வீடுகளும் மின் சாரமில்லாத வீடுகளாக இருக்க மாட்டாது. இந்தத் திட்டம் நிறைவு பெற்ற பின்னர் ஜனாதிபதி நாடு பூராகவும் கிராமங்கள் மற்றும் பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளார். அதேபோன்று நாமும் மின்சாரம் பெற்ற அந்தக் குடும்பங்களை சந்தித்து கலந்துரையாடுவோம்'
இலங்கையில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளாதவர்கள் அதிகளவில் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் 25,000 பேர் உள்ளதாகவும் இவர்களில் 2,080 பேரின் கிராமங்களுக்கே மின்சாரம் கிடைக்காத நிலையுள்ளது" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago