Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனுமதி மறுக்கப்பட்டிருந்த105 வீடுகளுக்கான அனுமதியை முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி பெற்றுக் கொடுத்துள்ளாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம், வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம், முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளருமாகிய சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு இவ்வருடம் 270 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 105 வீடுகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி, மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் க.ஐகநாதன் ஆகியோர் தெரிவித்திருந்தார்கள்.
இதனைக் கவனத்தில் கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர், அமைச்சர் களுடன் கலந்துரையாடி, மறுக்கப்பட்ட வீட்டுகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
மேலும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் மேலதிகமாக வீடுகள், இவ்வருடத்தில் ஒதுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்ததாக முன்னாள் பிரதிஅமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago