Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 நவம்பர் 19 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த நாட்டில் உள்ள அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபட்டு நிற்கும் வகையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நேற்று (18) தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றம்போதே அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனப்பிரச்சினையை யாரும் தங்களது சுயநல அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது. இந்த நாட்டில் உள்ள மூவின மக்களும் சந்தோசமாக, சமத்துவமாக வாழ்வதற்கு ஏற்றவகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.
எவரும் இரண்டாம் தர பிரஜைகளாக இருக்ககூடாது.ஒரு இனத்தினைக்கண்டு இன்னுமொரு இனம் அச்சம்கொள்ளும் நிலையில்லாமல் அனைவரும் சகோதரத்துவமாக இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் செயற்படும் வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும்.
இனமோதல்கள், இனப்பகைகள் இல்லாமல் அனைவரும் சமத்துவமாக முன்னைய காலத்தில் இருந்த ஐக்கியத்துடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் விட்டுக்கொடுப்புகளை செய்துவருகின்றார்.
இந்த ஆண்டில் புதிய அரசியல்யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் அனைவரும் அச்சமின்ற உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும்..
சுவிஸ் போன்ற நாடுகளில் பல இனங்கள்,பல மதங்கள் இருக்கின்றபோதிலும் அனைத்து இன மக்களும் மத மக்களும் சந்தோசமாக ஜனநாயக உரிமையுடன் வாழுகின்றனர்.அதேபோன்ற சூழலை இலங்கையிலும் ஏற்படுத்தப்படவேண்டும்.
சகல மக்களும் சுயமரியாதையுடன் தங்களது கௌரவத்தினை பேணிக்கொண்டு ஐக்கியமாக வாழும் நிலையினை புதிய அரசியல்யாப்பு ஏற்படுத்தவேண்டும் என, அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
18 minute ago
25 minute ago