Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 85 இலட்சம் ரூபாய், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அழகிப்போடி கருணாகரன் தெரிவித்தார்.
கிழக்கு விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், வந்தாறுமூலை உப்போடை வீதி புனரமைப்புக்கு 30 இலட்சம் ரூபாயும் கொம்மாதுறை மதுராபுரி ஸ்ரீஅரசடி நாகபூசணி அம்மன் ஆலயக்; கிணறு நிர்மாணிப்புக்கு 50 ஆயிரம் ரூபாயும் பலாச்சோலை ஸ்ரீபத்தினி அம்மன் ஆலய கட்டட நிர்மாணத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும் சித்தாண்டி மஹா பெரியதம்பிரான் ஆலயப் புனரமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாயும் சித்தாண்டி ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய கட்டட புனரமைப்புக்கு 50 ஆயிரம் ரூபாயும் வந்தாறுமூலை கிடாகுழி பிள்ளையார் ஆலயத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும் பலாச்சோலை வீதி புனரமைப்புக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் வந்தாறுமூலை நெடுவல்தம்பி வீதி கரச்சவெளி வீதிப் புனரமைப்புக்கு பத்து இலட்சம் ரூபாயும் செங்கலடி ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய புனரமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாயும் சித்தாண்டி இந்துமயான வீதிப் புனரமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாயும் சித்தாண்டி இந்துமயான சுற்றுமதில் நிர்மாணிப்புக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் செங்கலடி அக்னி இசைக்குழுவுக்கு 60 ஆயிரம் ரூபாயும் ஆறுமுகத்தான் குடியிருப்புக்கிராம அபிவிருத்திச்சங்க தளபாடக் கொள்வனவுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வந்தாறுமூலை ஸ்ரீமஹா பெரியதம்பிரான் ஆலயப் புனரமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாயும் சித்தாண்டி மாரிமுத்து வைத்தியர் வீதி புனரமைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆலய புனரமைப்குக்கு ஒரு இலட்சத்து 50 ஆயரம் ரூபாயும் மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார் களுவன்கேணி புனித அந்தோனியார் தேவாலய புனரமைப்புக்கு 10 இலட்சம் ரூபாயும் களுவன்கேணி பிரதேச வீடமைப்புத் திட்டத்துக்கு 20 இலட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், செங்கலடி அக்னி இசைக்குழுவுக்கு 60 ஆயிரம் ரூபாயும் பெரிய புல்லுமலை நாககன்னி ஆலய புனரமைப்புக்கு 50 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளார். மாகாணசபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தன்னாமுனை சென் ஜோசப், மாவடிவேம்பு சிவானந்தா, ஆறுமுகத்தான் குடியிருப்பு காந்தி ஆகிய மூன்று விளையாட்டுக்கழகங்களுக்கும் தலா பத்தராயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago
38 minute ago
56 minute ago