Suganthini Ratnam / 2015 நவம்பர் 02 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை முன்கூட்டி தயாரிக்கவேண்டுமென காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் கேட்டுக்கொண்டுள்ளார்.
விளைவுசார் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு, காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'விளைவுசார் அபிவிருத்திக்கான முகாமைத்துவம் முக்கியமானது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டம், அது ஏற்படுத்தும் விளைவு என்பவற்றை சரியாக அடையாளம் கண்டு திட்டமிடல் செய்ய வேண்டும். இதற்காக மூன்றாண்டு, ஐந்தாண்டுத் திட்டங்கள் கிராமம் மற்றும் பிரதேச மட்டங்களில் இருக்க வேண்டும்.
இலக்கை அடையும் விளைவை ஏற்படுத்தும் திட்டங்களை அடையாளம் கண்டு வருட ஆரம்பத்தில் அவற்றை தயாரிக்க வேண்டும்' என்றார்.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago