Editorial / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், இம்மாதம் 16ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என்று, மாவட்டச் செயலக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம், இன்று (12) நடைபெறவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டதாக, மாவட்டச் செயலக ஊடகத் தகவல் பிரிவு அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் அறிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்ற முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .