2025 மே 07, புதன்கிழமை

அமைச்சர் துரைராஜசிங்கம் கதிரவெளி வைத்தியாலைக்கு விஜயம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான துரைராஜசிங்கம் இன்று கதிரவெளி பிரதேச வைத்தியசாலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறை நிறைகளை கேட்டறிந்துக்கொண்டார்.

இவ் வைத்தியசாலையில் நாளாந்தம் 75க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருவதாகவும் ஆனால் இங்கு இருக்கும் ஒரு வைத்தியர் போதாமல் இருப்பதுடன் வைத்தியசாலைக்கு உரிய கட்டடத் தொகுதிகளும் விருத்தி செய்யப்பட வேண்டும்.

அத்துடன் இங்கு தாதியர்கள், மருந்து வழங்குனர்கள் எவரும் இல்லை என்பதுடன் இவ்வைத்தியசாலைக்கு கதிரவெளியைச் சுற்றியுள்ள சுமார் எட்டு கிராமத்து மக்கள் வருகை தந்து மருத்துவம் பெறுகின்றார்கள்.

எனவே, இவ் வைத்தியசாலைக்கு உரிய வசதிகள் செய்து தரப்படுவதுடன் இவ் வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

இதன் போது அமைச்சர்,பிராந்தியத்துக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவிய போது வைத்தியஅதிகாரி,

எதிர்வரும் டிசம்பர் மாதம் அளவில் இவ்வைத்தியசாலைக்கு இன்னுமொரு வைத்தியர் நியமிக்கப்படுவதுடன் மருந்து வழங்குனர் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X