2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்குளம் புணரமைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மார்ச் 05 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக் குளம் புணரமைப்பு செய்யப்படவுள்ளது.

இதற்காக கிழக்கு மாகாண ஆளுநரால் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக் குளத்தைப் புணரமைப்புச் செய்து தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஆளுநரால் முதல் கட்டமாக ஒரு மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக, இந்த தீர்த்தக் குளம் துப்பரவு செய்யப்படவுள்ளதுடன், இக்குளத்தினுள் காணப்படும் ஆற்றுவாழை மற்றும் ஏனைய தாவரங்களையும் அகற்றி, குளத்தை துப்பரவு செய்து, தாமரை தாவரத்தை விடவும் உத்தேசித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.வடிவேல் தெரிவித்தார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் திலகராஜாவின் வழிகாட்டலில் இதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமையன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X