Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன், க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் மாவட்டங்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இல்லைமையால்தான் அபிவிருத்தி நடவடிக்கைகளில் தாமதங்கள் ஏற்படுவதாகவும் ஒதுக்கப்படும் நிதி மீண்டும் திருப்பியனுப்பப்படுவதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட நிறைவு விழாவும் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும், ஜனாதிபதியில் தலைமையில், மட்டக்களப்பு - வெபர் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டினை முன்னேற்றுவதற்காக, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்றார்.
இதேவேளை, கிழக்கு மாகாணக் கடற்பரப்பின் ஊடாகவே, நாட்டுக்குள், பல்வேறு போதைப்பொருள்கள் கொண்டுவரப்படுவதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும், ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
“இது தொடர்பில் முப்படையினர் உட்பட சகல பாதுகாப்புப் பிரிவினரும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“போதைப்பொருள் போன்று மிக மோசமான செயற்பாடுகளால் பிள்ளைகள் பாதிக்கப்படும் நிலைமையுள்ளது. பிள்ளைகளுக்கு பலவிதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பொலிஸார், கல்வித் திணைக்களம், சுகாதாரத் திணைக்களங்கள் உட்பட பலர், இந்தப் பிள்ளைகளைப் பாதுகாக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025