2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’அமைச்சின் திட்டங்களில் கவனம் உள்ளது’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலமாக, அரச மற்றும் தனியார் துறை கூட்டு முதலீட்டு முயற்சிகளில், அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதால், நகர திட்டமிடல், நீர் வழங்கல் கருத்திட்டங்களிலும், அதற்கு தாம் முக்கியத்துவம் அளிப்பதாக, அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்துக் கலந்துரையாடிய கனேடிய அரசாங்கத்தின் உயர்மட்ட வர்த்தக தூதுக்குழுவினரிடமே, அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கைக்கு வந்துள்ள உயர்மட்ட வர்த்தக அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர், அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று  (25), அவரைச் சந்தித்திருந்தனர்.
இதன்போது, கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் திண்மக் கழிவகற்றல் போன்றவற்றுக்கு, தங்களது அமைச்சரினூடாக, பல்வேறு செயற்றிட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் கிராம மக்கள், நீரைப் பெற்றுக்கொள்வதற்கு முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .