2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘அமைச்சுகளைப் பெற்று அபிவிருத்தியைச் செய்திருக்கலாம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

நல்லாட்சியைக் கவிழவிடாமல் பாதுகாத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பெறுப்புக்களைப் பெற்று வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியைச் செய்திருக்கலாமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தமிழ் ஊடகப்பிரிவின் பொறுப்பாளர் முத்துக்குமார் பிரபாகரன் தெரிவித்தார்.

இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாமெனவும் வீதி அபிவிருத்திகள், கட்டடங்கள் போன்றவற்றை அமைத்திருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில், மட்டக்களப்பில் அமைந்துள்ள அக்கட்சியின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது ஒன்றுமே நடைபெறவில்லையென்றார்.

எனினும், தமிழ் மக்களின் வாழ்வை மேம்படுத்தி, தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும், கோட்டாபய ராஜபக்ச தயாராகவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X