Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் சட்டம் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு, ஜனநாயக ரீதியாக செயற்படும் அமைப்புக்களை தடை செய்வதை இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலணை செய்ய வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்றத் தலைவர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (01) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் போது கருத்துரைத்த அவர்,
“தமிழர்கள் தீர்வு தொடர்பாக ஜெனிவா தீர்மானத்தல் இந்திய அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டம் என்பது சர்வதேசத்தை ஈர்த்த செயற்பாடென்பது தமிழ் மக்களுக்கு கூடுதலான ஆறுதலைக் கொடுத்துள்ளது. இந்த விடயங்களை அமுல்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும்.
“மாகாண சபை முறையை தொடர்பாக தேர்தல் நடத்தப்பட்டதால், அதற்கெதிராக பௌத்த மதகுருக்களால் ஆர்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அறியக்கூடியதாகவுள்ளது. இந்தச் செயற்பாடு மத ரீதியாக செயற்படுத்தப்படுவது நாகரீகமாகாது.
“தற்போதைய ஜனாதிபதித் தெரிவின் பின், குறிப்பிட்டசில அமைச்சர்களால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கருத்துகளும் செயற்பாடுகளும் கூடுதலாக இன முரன்பாட்டைத் தோற்றுவிக்கக்கூடியதாக உள்ளன.
“அதிகாரப்பகிர்வு, தொல்பொருள் ஆராய்சியோடு சம்பந்தப்பட விடயங்கள், தொல்பொருள் திணைக்களங்கள் தொடர்பான விடயங்கள், காணி, வடக்கு மற்றும் கிழக்கு வளங்களைப் பயன்படுத்தும் விடயங்கள் பல மத்திய அரசாங்கத்தின் வலுவுள்ள பல அமைச்சர்கள் கையாளுவது என்பது தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளைக் கொண்டுவந்துள்ளன.
இந்தச் செயற்பாடுகளை நிறுத்துவற்காக ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
33 minute ago
34 minute ago