Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி , ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அரசாங்கத்தின் அரிவுறுத்தல்களுக்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்களுக்கு சமுகமளிக்கும் பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டலில், அலுவலகங்களுக்கு வருகை தருகின்றவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்போது, அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகின்றவர்கள் கொரோனா தொற்று அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் காணப்படலாம் என்ற அடிப்படையில் அலுவலகத்துக்குள் அனுமதிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் பயன்படுத்துவதற்காக வெப்ப அளவீட்டுக் கருவிகள், மாவட்டச் செயலாலரால் மாவட்டச் செயலகத்தில் வைத்து அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் நேற்று (24) வழங்கப்பட்டன.
இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago